உலகெங்கிலும் உள்ள நாடுகள் பொருளாதார வளர்ச்சிகள் மந்த நிலைமையை அடைந்துள்ளமையால் அவற்றின் எதிர்காலம் நிலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலுக்கு முகங்கொடுத்த நிலையில் அவற்றின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி முழுமையாக செயலிழந்தமையால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், உலகப் பொருளாதாரம் உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள் நீடிப்பதன் காரணமாகவும், அதன்மீது பலத்த அடிகள் வீழ்ந்துள்ளமை அவதானிகள் மூலம் உறுதிப்படுத்துள்ளது.
இவ்வாறான நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்படாமல் உள்ளமை பல்வேறு தரப்பினருக்கும் ஆச்சரியமான விடயமாக உருவெடுத்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவால் மட்டும் எவ்வாறு இப்படி முறையாக சிக்கல்கள் இன்றி கையாளப்படுகின்றது என்ற கேள்விகள் நிறைந்தே உள்ளன.
இவ்வாறான நிலையில், சர்வதேச நாணயநிதியத்தின் ஆசியா மற்றும் பசுபிக் பிரிவின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசனின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோய் ஆரம்பமாகியதன் பின்னர் உலகின் பல பகுதிகளிலும் மந்தநிலை இருக்கும் நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் முன்னணியில் காணப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், குறித்த அறிக்கையின் பின்னர் கருத்துக்களை வெளியிட்ட, பாளர் கிருஷ்ணா சீனிவாசஏறக்குறைய எல்லா நாடுகளும் மந்த நிலையில் உள்ளபோது, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா சிறப்பாகச் செயற்படுகிறது என்றும் பிரகாசமான இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உலகப் பொருளாதாரத்தில் மூன்றிலொரு பங்கைக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள் நாடுகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டாகின்றபோது பொருளாதார மந்தநிலைக்குச் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதேநேரம், நாடுகளில் அதிகமான பணவீக்கம் காணப்படுகிறது என்றும் சீனிவாசன் மேலும் கூறினார்.
அண்மையில் சர்வதேச நாணயநிதியத்தின் ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்ற அறிக்கையில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி இருண்ட நிலைமைக்குள் இருப்பது முன்னறிவிப்புடன் வெளியிடப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் முக்கிய காரணிகளால் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருக்கும் என்பது அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில், இந்தியாவின் வளர்ச்சி வீதமானது 2021 இல் 8.7 சதவீதமாக இருந்ததோடு, 2022இல் 6.8 சதவீதமாக காணப்படுவதாகவும் 2023 இல் அது 6.1சதவீதமாகவும் அமையும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், அந்த சதவீதம் கூட சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகும்.
அதேவேளை, 2023ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சுருக்கமடையும் என்று சர்வதேச நாணய நிதியம் அனுமானித்துள்ளது.
அதனடிப்படையில், அமெரிக்காவினது பொருளாதாரமானது ஒருசதவீதத்தாலும் ஐரோப்பாவினது 0.6 சதவீதத்தினாலும், சீனா 4.4 சதவீதத்தினாலும் சுருக்கமடையும் என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தான், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றிருந்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் வளர்ச்சிக்கே அரசாங்கம் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்றும், அதை நிலைநிறுத்துவதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அவரது கூற்றிற்கு சான்று பகரும் வகையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, (ஜிடிபி) 3.2டிரில்லியன் டொலர்களாக உள்ளதோடு, இது தற்போது உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக உள்ளது.
சர்வதேச நாணயநிதியம் 2022ஆம் ஆண்டை மையப்படுத்தி கணிப்பிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம், மிக முக்கியமாக இந்தியாவானது, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னதாக 11ஆவது இடத்தில் இருந்தது. தற்போதுஇந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
விசேடமாக இந்தியாவை பின்தள்ளி இந்தியா முன்னகர்ந்து வரும் நிலையில் முன்வரிசையில் ஜேர்மன், ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.