மடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான வீடு நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை பயனாளியினால் முழுமையாக கட்டி முடிக்க முடியாத காரணத்தினால் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இராணுவத்தினர் முழுமையாக கட்டி முடித்தனர்.
மேலும் குறித்த வீட்டிற்கு தேவையான சில தளபாட பொருட்களையும் இராணுவத்தினர் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் வன்னி இராணுவ கட்டளைத் தளபதி, மடு பிரதேச செயலாளர் கே.வி. நிஜாகரன் உதவி பிரதேச செயலாளர், ஆகியோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.