ரோவின் தலைவர் சமந் குமார் கோல் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேசியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களிற்கான ஆலோசகர் சாகல ரட்நாயக்கவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொடவும் இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.
மேலும் ரோவின் தலைவர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவையும் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை திரும்பிய நிலையில் திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் முக்கிய பிரமுகர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள முழுமையாக வெளியாகவில்லை எனினும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளின் போது ரோ தலைவர் பல பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்தும் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் குறித்தும் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
னது அரசாங்கம் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எதனையும் செய்யாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என்றும் இந்த விபரங்களை ரோவின் தலைவர் இந்திய பிரதமரிடமும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடமும் தெரிவிப்பார் என்றும் அறியமுடிகின்றது.