உயிர் காக்கும் மருத்துவ சாதனங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது.
ஆனால் எங்கள் சாதனங்களின் விலை மற்ற நான்கு நாடுகளால் தயாரிக்கப்படும் சாதனங்களின் பெறுமதியில் மூன்றிலொரு பங்காகும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
சித்ரா கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சாதனங்கள் பிரிவைத் திறந்து வைத்த பின்னர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவதித்தார்.
அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் மற்றும் சீனா போன்ற மூன்று முதல் நான்கு நாடுகளில் இங்கு தயாரிக்கப்படுவதை போன்ற சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலையில் நான்கில் ஒரு பங்கு முதல் மூன்றில் ஒரு பங்கு வரை குறைவாகவே இந்திய நோயாளிகளுக்குக் கிடைக்கின்றன என்று சிங் கூறினார்.
மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவ நிர்வாகத்தில் தன்னிறைவு பெறுவதற்கான பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பார்வையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காண்பித்தார்.
2017ஆம் ஆண்டில் உலகளாவிய ஒத்திசைவு பணிக்குழு கட்டமைப்பிற்கு இணங்கவும் சிறந்த சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்கவும் மருத்துவ சாதன விதிகளை அறிவித்தவர் பிரதமர் மோடி.
இதன்மூலம் இந்தியாவில் மருத்துவ சாதனங்களைத் தயாரிப்பதற்கான ஒழுங்குமுறை இடையூறுகளை நீக்கி, நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக சிறந்த மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் வணிகம் செய்வதை எளிதாக்குகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
வாழ்க்கை வசதிக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம், தனியார் தொழில் நிறுவனங்களும் சம பங்குதாரர்களாக மாறி, திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.
நிலையான முன்முயற்சிகளின் போது பொது மற்றும் தனியார் துறைகளில் சமமான பங்குகளைக் கொண்டிருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி உற்பத்தி மற்றும் பிற மருத்துவ முயற்சிகளில் புதிய முன்முயற்சிகளை ஆதரிப்பதற்காக தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டும் சமமான பங்களிப்புடன் 400 கோடி ரூபா நிதியை உருவாக்குவதை அவர் உதாரணம் காட்டினார்.
130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா கொரோனா எதிரான போராட்டத்தில் உலகிற்கு வழியைக் காட்டியது எனவும் அமைச்சர் சிங் சுட்;டிக்காட்டினார்.