தாய்வான் ஜனாதிபதி சீனப் படையெடுப்பிற்கான சாத்தியமான நிலைமைகள் குறித்து குறிப்பிட்டு அச்சம் வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி, பராக் ஒபாமாவின் உரையாசிரியரும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான பென் ரோட்ஸ் எழுதிய கட்டுரையில், தாய்வான் சீனப் படையெடுப்புக்கு தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சீன இராணுவம் தாய்வானை விட பெரியளவில் உள்ளது, இதனால் தாய்வான் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க முயற்சித்தது.
தற்போதைய தாய்வான் ஜனாதிபதியின், பதவிக் காலத்தில், பாதுகாப்புச் செலவினம் 13 சதவீதம் அதிகரித்து, 2023இல் 19 பில்லியன் டொலர்களை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் விடுதலை இராணுவம் கடுமையாக முறையில், ஏதாவது செய்ய விரும்பினால், தாய்வான் ஜனாதிபதி செலவுகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
ஒன்றுக்கு இருமுறை யோசிக்க வேண்டும்’ என்று முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சீனா தனது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை விமானக் கண்காட்சியைத் ஆரம்பித்துள்ளதோடு, ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள், ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ‘சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் தாய்வானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் கொண்டிருப்பதை சீனா உறுதியாக நிராகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூற்றானது, அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் முரண்படுகிறது,
இதேநேரம், 69 வயதான ஷி ஜின்பிங் கடந்த மாதம் சீனாவின் ஜனாதிபதியாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறையாக பதவியேற்றார், அதேநேரத்தில் அனைத்து சக்திவாய்ந்த அரசியல் நிலைக்குழுவை விசுவாசிகளுடன் வலுப்படுத்தியுள்ளார்.
இந்தச் செயற்பாடானது, கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த தலைவராக தன்னைப் உறுதிப்படுத்தியவராக உள்ளார்.