ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணித்து தமிழக மக்களின் உணர்வுகளுடன் விளையாடக் கூடாது என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்த ஹிந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
புதிய வடிவில் ஹிந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் ரயில்வே துறை விளையாடக் கூடாது என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.