கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் மொராக்கோ மற்றும் ஜப்பான் அணிகள் வெற்றிபெற்று ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதேபோல தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜியம் மற்றும் நான்கு முறை சம்பியன் அணியான ஜேர்மனி ஆகிய அணிகள் ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், குரேஷியா அணியும் பெல்ஜியம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அஹமட் பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது, எவ்வித கோலும் இன்றி சமநிலையில் முடிவடைந்தது.
குழு எஃப் பிரிவில் நடைபெற்ற போட்டியில், மொராக்கோ அணியும் கனடா அணியும் மோதின.
அல்துமானா விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், மொராக்கோ அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியது.
குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஜப்பான் அணியும் ஸ்பெயின் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பதிவுசெய்து ரவுண்ட்-16 சுற்றுக்கு தகுதிபெற்றது.
குழு இ பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஜேர்மனி அணி மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதின.
அல் பைட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஜேர்மனி அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.