வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு நபரும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அல்லது வருகையில் எதிர்மறையான கொவிட்-19 சோதனையை (PCR/RAT) காண்பிக்க வேண்டிய அவசியம் இனி தேவையில்லை.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார். இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பிரஜைகள்- சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த பிறகு கொவிட்-19 நேர்மறையாக இருந்தால், அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனை அல்லது ஹோட்டல், குடியிருப்பு இடத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான செலவை வெளிநாட்டினர்- சுற்றுலாப் பயணிகள் ஏற்க வேண்டும்.