தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது, விநியோகிப்பது வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வட கெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுவர்களை பொதுஇடத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்னிலையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அக்டோபரில் நடந்ததாக கூறப்படும் நிலையில், இதுபற்றிய தகவல்கள் கடந்த வாரம் தான் வெளிவந்தன.