லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது லீக் போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தரில் அபார வெற்றிபெற்றது.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இப்போட்டியில், கண்டி பெஃல்கன்ஸ் அணியும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெஃல்கன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில், சீக்குகே பிரசன்ன 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 14.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், கண்டி பெஃல்கன்ஸ் அணி 109 ஓட்டங்கள் வித்தியாசத்தரில் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 26 ஓட்டங்களையும் கீமோ போல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கண்டி பெஃல்கன்ஸ் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க ஹெட்ரிக் அடங்களாக 4 விக்கெட்டுகளையும் பெபியன் அலென் 2 விக்கெட்டுகளையும் ஷாவுர் கான், கார்லோஸ் பிரத்வெயிட் அஷ்யன் டேனியல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஆந்ரே பிளெட்சர் தெரிவுசெய்யப்பட்டார்.