இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒன்பது அறக்கட்டளைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிசம்பர் 21 மற்றும் 28ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
ஜி.எம்.பி தொழிற்சங்கம் மற்றும் யுனெய்ட் தொழிற்சங்கங்கள் ஊதியம் தொடர்பான பிரச்சினையில் இந்த முடிவினை எடுத்துள்ளனர்.
துணை மருத்துவர்கள், அவசர சிகிச்சை உதவியாளர்கள், அழைப்பு கையாளுபவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட ஜி.எம்.பி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்வரும் அறக்கட்டளைகளில் டிசம்பர் 21 மற்றும் 28ஆம் திகதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள்.
• தென் மேற்கு ஆம்புலன்ஸ் சேவை
• தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை
• வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவை
• தென் மத்திய ஆம்புலன்ஸ் சேவை
• வடகிழக்கு ஆம்புலன்ஸ் சேவை
• ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை
• வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை
• வெல்ஷ் ஆம்புலன்ஸ் சேவை
• யார்க்ஷயர் ஆம்புலன்ஸ் சேவை
வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், நோர்த் வெஸ்ட் மற்றும் நோர்த் ஈஸ்ட் ஆம்புலன்ஸ் சேவை அறக்கட்டளைகளில் உள்ள 1,600க்கும் மேற்பட்ட அதன் உறுப்பினர்கள் டிசம்பர் 21ஆம் திகதி வெளிநடப்பு செய்வதில் சேருவார்கள் என்று யுனைட் தெரிவித்துள்ளது.
லண்டன், யார்க்ஷயர், வடமேற்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய ஐந்து சேவைகளில் யுனிசனின் உறுப்பினர்களான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள்.