பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார்.
இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில் “இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்
இந்தியாவில் இருந்து வரும் காற்றால் , கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது
இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது. மேலும் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.