போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்டத்தில் அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள்,பொது இடங்களில் குறித்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன
மோப்ப நாய்களின் உதவியுடன் குறிப்பாக பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா? என்பது தொடர்பிலும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பரிசோதனைகள் தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் மேற் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.