மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி அமல்படுத்தப்பட்டஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அதைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய அரசு உரிய முறையில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை என சில மாநிலங்கள் கூறினாலும் இழப்பீட்டுத் தொகை குறித்த ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.
கணக்காயா்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே மத்திய அரசு தொகையை விடுவிக்கும் என்றும் ஜிஎஸ்டி வசூலை மாநிலங்களுக்கு உரிய முறையில் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.