சங்கானை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சங்கானை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். செயற்பாட்டு மையம் மற்றும் மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களம் ஆகியன இணைந்து இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் உள ஆற்றலை மேம்படுத்துவது எவ்வாறு, நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு, தொழில்வாய்ப்பில் இணைவது எவ்வாறு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட செயலகத்தினர், சங்கானை பிரதேச செயலகத்தினர், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.