இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா தான் என்பது பலதரப்பட்ட தருணங்களில் அண்மைக்காலமாக நிரூபமாகிவருகின்றது.
ஆரம்பத்தில், இலங்கை கொரோனா தொற்றால் நெருக்கடிகளுக்கு உள்ளாகிய நிலையில், அஸ்டா சனிக்கா ஊசியை இலவசகமாக வழங்கியிருந்த இந்திய அரசாங்கம், தொடர்ந்து உலர் உணவுப்பொதிகளையும் வழங்கியது.
அதனையடுத்து, பொருளாதார நெருக்கடிகளால் இலங்கை மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு தற்போதும் சிக்கலில் உள்ள நிலையில், பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 3.8பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதில், உலர் உணவுப்பொருட்கள், எரிபொருட்கள், மருந்துகள், விவசாயிகளுக்கான உரங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமானவையும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம், குறித்த உதவிகளுடன் இந்தியா இலங்கையை கைவிடவில்லை. இலங்கை நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக சென்றுள்ள நிலையில் அதற்கான பிணையாளராகவும் இந்தியா பங்கேற்றுள்ளது.
குறிப்பாக, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாகவே குறித்த கலந்துரையாடல்களில் பங்கேற்றுள்ளமை மிகவும் முக்கியமானதொரு விடயமாகும்.
இவ்வாறிருக்கையில், தற்போது, இலங்கையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கையில் இந்திய ரூபாவை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக வகைப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியின ஒப்புதலை வழங்கியிருக்கின்றது.
இதனடிப்படையில், இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் பெறுமதியான இந்திய ரூபாவை வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாவை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாவை மற்றொரு நாணயமாக மாற்றிப் பயன்படுத்த முடியுமென்றும், இதை செயல்படுத்துவதற்கு, இலங்கையிலுள்ள வங்கிகள் இந்திய வங்கியுடன் (ழேளவசழ யஉஉழரவெ) நொஸ்ட்ரோ கணக்குகளை’ ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்மட்டக் குழுவிடத்தில் இலங்கைத்தரப்பினால் குறித்த இந்திய ரூபாவை அங்கீகரிப்பது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் இதேபோன்ற கோரிக்கைகளை இலங்கையில் இந்திய ரூபாவாவுன் சேர்த்து ரஷ்ய ரூபிளை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக ரஷ்ய ரூபிள் பயன்பாடு மற்றும் ரஷ்ய கட்டண தளங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக அமெரிக்காவின் அங்கீகாரம் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய டொலர், நோர்வே குரோனர், கனடிய டொலர், பவுண்ட் ஸ்டெர்லிங், சீன ரென்மின்பி, சிங்கப்பூர் டொலர், டென்மார்க் குரோனர், ஸ்வீடிஷ் குரோனர், யூரோ, சுவிஸ் பிராங்க், ஹொங்கொங் டொலர், தாய் பாட் ஜப்பானிய யென், அமெரிக்க டொலர் மற்றும் நியூசிலாந்து டொலர் ஆகியவெளிநாட்டு நாணயங்கள் இலங்கையில் தற்போது இருக்கின்றன.
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சர்வதேச வர்த்தகத்தை ரூபாவில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறையை இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் வட்டியை ஆதரிப்பதற்காகவும் அறிவித்திருக்கின்றது.
விசேடமாக, ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளை அடுத்து இந்திய நாணயத்தின் மீதான அழுத்தத்தை அடுத்து இந்திய மத்திய வங்கியின் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை முக்கிய நகர்வாக பார்க்கப்படுகின்றது.
மேலும், சில நாடுகளுடனான வர்த்தகத்திற்காக அமெரிக்க டொலர் பயன்படுத்துவதைத் தடுக்கும் விதிகளைத் தவிர்ப்பதற்கு, இந்திய ரிசவ் வங்கியின் பொறிமுறையானது இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இறக்குமதிக்கான மாற்று முறைகளைத் தேடும் இந்திய நிறுவனங்கள் புதிய வழிமுறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது முக்கியமான விடயமாகும்.இது இலங்கையில் இந்திய முதலீடுகள் உள்வாங்கப்படுவதற்கும் வாய்ப்புக்களை வெகுவாக திறந்துள்ளது.