வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்றையதினம் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
ஐ.ஓ.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன், மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம், வவுனியா பிரதேச செயலகம், மற்றும் வவுனியா வலயக்கல்விப் பணிமனைகள் என்பன இணைந்து குறித்த கண்காட்சியினை நடாத்துகின்றது.
இதன்போது பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 9 தொடக்கம் காபொத உயர்தர மாணவர்களிற்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வு இடம்பெற்றிருந்தது.
மேலும் இக்கண்காட்சியில் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் தொழில் தேடுபவர்கள், சுயதொழிலில் ஈடுபட்டு பயிற்சிகளை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகள், என பலரும் கலந்து கொண்டு பயனடைந்திருந்தனர்.
இந்நிகழ்வில் உயர் கல்வி நிறுவனங்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சிறு தொழில் முயற்சியாண்மை பிரிவு போன்ற பல்வேறு அரச நிறுவனங்கள் அடங்களாக 21 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.
உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி, ஐ.ஒ.எம் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.