தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கூடியது.
ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர், தொழிற் சங்கங்களின் உறுப்பினர்கள், முதலாளிமார்களின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டின் தொழில்துறை அபிவிருத்தி தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஆலோசனை சபையின் உறுப்பினருமான பாரத் அருள்சாமி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான யோசனை முன்வைத்தார்.
இதன்போது முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன் போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி நீதிமன்றத்தின் பிரகாரம் தொழிலாளர்களுக்கு சார்பாக சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை முன்கொண்டு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் பெருந்தோட்ட கம்பெனிகள் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளின் மூலமாக தொழிலாளர்களின் உழைப்பை பறிப்பது மாத்திரமன்றி அவர்களின் உரிமையையும் நசுக்குகின்றன. பல்வேறுப்பட்ட தொழில் பிணக்குகள் முதலாளிமார் சமேளனத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கினை காரணம் காட்டி தட்டிக் கழிக்கப்பட்டு வருகின்றன.
தேயிலைத் தொழில்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் தொழிலாளர்களின் வேதனைமானது அதே நிலையிலேயே உள்ளது. டாலர் வீக்கத்தின் பயனை கம்பெனிகள் பெற்ற போதிலும் அதில் எந்தவிதமான நன்மையும் தொழிலாளர்கள் பெறவும் இல்லை மாறாக அவர்களின் உழைப்பே சுரண்டப்படுகின்றன. எமது நாட்டிற்கு அந்நிய செலவாணி அவசியம்தான் ஆனால் அது எமது அப்பாவி தொழிலாளர்களின் உயிர்களில் அடையக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
இதன் பண்பு தொழிலில் சங்கங்களுக்கும் முதலாளிமார் சமையலறத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக தொழிலாளர் அமைச்சர் தொழிற்சங்கங்களையும் முதலாளிமார் சமேலனத்தயும் தனித்தனியே சந்தித்து தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்கவும் அவர்களுக்கு சரியான ஒரு ஊதிய முறையும் அறிமுகப்படுத்தவும் கூட்ட ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வரவும் தன் முடிவெடுக்க உள்ளதாக உறுதி வழங்கினார்.
இதன் போது வரி அதிகரிப்பின் விளைவுகளும் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டது இதன் போது இலங்கையில் தற்போது 9800 கம்பெனிகளும் மூன்று லட்சத்து 80 ஆயிரம் தொழில் முனைவோருமே வாட் வரியை செலுத்துவதாக அமைச்சர் கூறினார். அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அதிகரிப்பு அவசியம் என்பதை கூறியவர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தொழிற்சங்கங்களுடன் தொழில் வழங்குனர்களிடமும் பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தொழில் சட்டத்தை தனி ஒரு அலகாக மாற்றுவது தொடர்பில் தொழிற்சங்கங்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தது. கடந்த காலங்களில் இந்த முயற்சியின் மூலமாக தொழிலாளர்களின் பல நலன்புரி விடயங்கள் பாதிக்கப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதனை தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நாட்டிற்கு முதலீடுக்கு வரும் முதலீடாளர்களுக்கும் நாட்டில் பணிபுரிய உள்ள தொழிலாளர்களுக்கும் இலகுவான முறையில் சட்டத்தை அறிந்து கொள்ளவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறைமையை உருவாக்க தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தார்.