இந்த ஆண்டு 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது வரலாற்றில் முதல் தடவை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒரு வருடத்திற்குள் 300,000 க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற பதிவு செய்து வசதி செய்துள்ளது.
இந்தநிலையில் இவ்வருடத்துக்கான இலக்கை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த SLBFE அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடியைத் தீர்க்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு பங்களிப்பார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலதிகமாக ஜப்பான், தென் கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைகளை வழங்குவதற்கு அமைச்சர் நாணயக்கார சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில், உத்தியோகபூர்வ வழிகள் மூலம் நாட்டிற்கு வரும் அந்நிய செலாவணியும் கடந்த சில மாதங்களில் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.