அண்மைய வரி திருத்தங்கள் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் 400 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்ற குற்றச்சாட்டை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மறுத்துள்ளார்.
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு அரசாங்கம் VAT அல்லது சுங்க வரியை அறவிடுவதில்லை என்பதால், இவ்வாறான கூற்றுக்களில் எந்த அடிப்படையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
எனவே புதிய வரிக் கொள்கையினால் விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.