ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை எனவும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளதாகவும் அந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட துணைநிற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சும், எதிரணிகளே இந்த விடயத்தில் வதந்திகளை பரப்பிவருகின்றன எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.