சீனாவின் தெற்கு பெருநகரமான குவாங்சோ முடக்குவதாக அறிவித்துள்ளது.
பாரிய கொரோனா பரவலைத் தடுக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மாகாண நிருவாகம் அறிவித்துள்ளது.
வேகமாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாடுகளால் உந்தப்பட்ட பல தொற்றுக்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், அதன் பூச்சிய-கொரோனா கொள்கைகளுக்கு நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், கடுமையான முடக்கல் விதிகள் பின்பற்றப்பட்டு வருவதோடு பொதுமக்கள் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.
குவாங்சோவில் 3.7 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் படசாலை மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டு பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கிடையில், பீஜிங்கில், மேலும் இரண்டு கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஆறு மாதங்களுக்கும் பின்னர் பீஜிங்கில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கைகள் தொடர்பில் விமர்சகர்கள் கேள்விகளை எழுப்பியிருந்தாலும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கும் சீனா தீவிர அணுகுமுறை பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாத ஆரம்பத்தில் கொரோனா சோதனைகளை குறிப்பிட்ட அளவில் மேற்கொண்ட சீனா பூச்சிய கொள்கைகளை தளர்த்துவதாக அறிவித்தது. அதில் விமானங்களுக்கான தடை நீக்கமும் உள்ளடக்கமாக இருந்தது.
அதேநேரம், ஹுபெக் மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங் நகரத்தின் ஆறு மாவட்டங்களில் வசிக்கும் அனைவரையும் கொரோனா சோதனைக்குள் உட்படுத்தி வரும் மாகாண அரசு தொழில்நுட்ப மையம் மற்றும் உயர் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளது.