நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர் காலத்து கோட்டை, போர்த்துக்கேயர் காலத்து வைத்தியசாலை மற்றும் மேலும் பல தொல்பொருள் சான்றுகள், வரலாற்று சின்னங்கள் காணப்படுகின்ற நிலையில் நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் நெடுந்தீவிற்கு வருகை தருகிறார்கள்.