நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி கூட்டம் நிறைவடைய இருந்த நிலையில், நான்கு நாட்கள் முன்னதாகவே நிறைவுபெற்றுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் திகதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தொடரில் 17 அமர்வுகளை நடத்துவதுடன், 16 சட்டமூலங்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் திட்டமிட்டது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இதையடுத்து, திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாகவே இன்று (வெள்ளிக்கிழமை) மக்கலவையை அவைத் தலைவர் ஓம் பிர்லா திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையினாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் குழப்பத்தாலும் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.