புதிய வகை கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைவு என தெரிவித்த அவர், கடந்த காலங்களைப் போல் முழு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் வலியுறுத்தினார்.