பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார்.
கராச்சி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தனது முதலிரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டெம்பிங் முறையில் இழந்;தது.
அப்துல்லா ஷஃபிக் 7 ஓட்டங்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சிலும் ஷான் மசூத் 3 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு ஸ்டெம்பிங்குகளையும் விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல் நிகழ்த்தியிருந்தார்.
145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும்.
இதன்மூலம் 145 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இரு விக்கெட்டுகள் ஸ்டம்பிங்கினால் வீழ்த்தப்பட்டுள்ளன. இச்சாதனையில் பங்களித்துள்ள நியூஸிலாந்து விக்கெட் காப்பாளர் பிளண்டல் இதன்மூலம் புதிய சாதனையில் இணைந்துள்ளார்.