மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான ஊடக தகவல்களை மையப்படுத்தி இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என அதன் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் உரிய வகையில் கடமைகளை நிறைவேற்றியுள்ளனரா? என்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாம் கட்டம் இந்த வாரம் தொடரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை விரைவில் நிறைவுறுத்தி அது தொடர்பில் முழுமையான அறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.