கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் அதிகமாக 898 பேர் 2019ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், 2018ஆம் ஆண்டு 678 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டில் 249 வெளிநாட்டவர்களும், 2021ஆம் ஆண்டில் 130 பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் எனவும் கூறப்படுகிறது.
குடிவரவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பிரஜைகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.