உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடியின் உதவியை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கோரியுள்ளார்.
திங்களன்று ஜெலென்ஸ்கிக்கும் மோடிக்கும் இடையே நடந்த தொலைபேசி அழைப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் இணைந்திருக்கும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றது.
சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
மத்தியஸ்தம் செய்வதற்கான கோரிக்கை குறித்து இந்திய அரசாங்கம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இரு தலைவர்களும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.