போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே. மாயாதுன்னவை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
அவரது நியமனம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
அவர் முன்னர் வகித்த பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக H.K.D.W.M.N.B. ஹபுஹின்னே நியமிக்கப்பட்டுள்ளார்.