புகழ்பெற்ற எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவின் முன்னணி சக்தியாக இருக்க வேண்டும் என்ற முயற்சியையும் தேடலையும் பாராட்டியுள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஆஷ்லே டெல்லிஸுக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் புதுடில்லியின் ஒரு பொதுஉரையாடல் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஆஷ்லே டெலிஸ், பிபெல் டெப்ராய் மற்றும் மோகன் சி ராஜா ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘கிராஸ்பிங் கிரேட்னஸ்’ என்ற புத்தகத்தை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டு வைத்தார்.
இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மற்றும் அதன் கொள்கைத் தெரிவுகள் குறித்து ஆஷ்லே டெல்லிஸுடன் ஒரு கலகலப்பான பொது உரையாடல் நடைபெற்றது என்று ஜெய்சங்கர் தனது டுவிட்டரிலும் பதிவு செய்திருந்தார்.
அத்துடன், முன்னணி சக்தியாக வெளிப்படுவதற்கான இந்தியாவின் தேடலைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு என ஜெய்சங்கர் புத்தகத்தை பற்றிய விவரிப்பில் குறிட்டார்.
அத்தோடு, வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே உயர்வுக்கான வழி என்றும், உலகின் முரண்பாடுகள் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச பாதுகாப்பு, ஆசிய மூலோபாய பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அமைதிக்கான சிரேஷ் ஆய்வாளர் ஆஷ்லே ஜே.டெல்லிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.