ஜம்முவின் வணிகர்கள் சமஸ்கிருதத்தில் பற்றுச்சீட்டுக்களை வழங்குவதற்கு முன்முயற்சி எடுத்துள்ளனர்.
இதையொட்டி, ஜம்முவின் மிகப்பெரிய தானிய சந்தைத் தொகுதியான நேரு சந்தையில் சமஸ்கிருத பற்றுசீட்டு வழங்கும் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், ஸ்ரீ ரன்பீர் வளாகம், கோட் பால்வால் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, அங்கு விற்கப்படும் அனைத்துப் பொருட்களின் பெயர்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு வாடிக்கையாளர்களிடம் சமஸ்கிருதத்தில் பேசப்பட்டு சமஸ்கிருதத்தில் தயாரிக்கப்பட்ட உண்டியல்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஷாம்லால் சர்மா ஆரம்பித்து வைத்ததோடு பொலிஸ் அதிகாரி சக்தி பதக், சிடு மணி சமஸ்கிருத சன்ஸ்தான் அறங்காவலர், வேளாண் இயக்குனர் ஜம்மு கே.கே. சர்மா, மணீஷ் சர்மா மற்றும் ஒய்.வி. சர்மா ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்போது, உரையாற்றிய ஷாம் லால் ஷர்மா, சமஸ்கிருத மொழிக்கு புகழ்பெற்ற கடந்த காலம் உள்ளது.
அது பல மொழிகளின் தாய், எனவே அதன் ஊக்குவிப்பு மற்றும் வளர்ச்சிக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டொக்டர் உத்தம் சந்த் சாஸ்திரி பதக்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய சக்தி பதக், ‘சமஸ்கிருதம் நமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் இந்தியாவின் பண்டைய மொழியாகும், இந்தியாவின் அற்புதமான கலாசாரம் மேலும் பரவுவதற்கு சமஸ்கிருதம் மக்களைச் சென்றடைவது முக்கியம்’ என்றார்.
கைலாக் ஜோதிஷ் ஓயாம் வேதிக் சனாதன் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் ரோஹித் சாஸ்திரி, சமஸ்கிருத மொழியின் எழுத்துரு தேவநாகரி எழுத்து. இந்த மொழியின் வார்த்தைகளின் உச்சரிப்பு மனதில் சரியான அதிர்வுகளை உருவாக்குகிறது என்பதாலும், வேதங்கள் இந்த மொழியில் தோன்றியதாலும், இந்த புனித மொழியில் உபநிடதங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் தோன்றியதாலும் இந்த மொழி மந்திரங்களை எழுதுவதற்கு ஞானிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது எழுதப்பட்டன.
சமஸ்கிருத இலக்கியம் மனித வரலாற்றில் மிகவும் வளமான மற்றும் முழுமையான இலக்கியமாகும். இந்த திட்டத்தைச் செய்வதற்கு முக்கியக் காரணம், தேவனி சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதுதான் என்றார்.