காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இரு கைவினைக் கலைஞர்கள் சில்ப் குரு விருது வழங்கப்பட்டது.
அத்துடன், அவர்கள் தேசிய அளவிலான விருதுகளைப் பெற்றதையடுத்து சிறந்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை வடிவமைத்த, காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு கைவினைக் கலைஞர்களுக்கு சில்ப் குரு விருதும், 6 கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய அளவிலான விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
தமது கைவினைப்பொருளில் சிறந்து விளங்கும் தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் சில்ப் குரு விருதுகள் வழங்கப்படுகின்றன.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ஷில்ப் குரு விருதுகள் முறையே காசி தூரியின் பஷீர் அஹ்மத் பட் மற்றும் இக்பால் ஹுசைன் கான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தவிர, 6 கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில், 2019 ஆம் ஆண்டிற்கான விருது ஸ்ரீநகரைச் சேர்ந்த கைவினைஞர் முசாபர் ஹுசைன் காஷோவும், ஜாதிபாலைச் சேர்ந்த ஜாகூர் அகமதுவும் பெற்றுக்கொண்டனர்.
இந்தக் கைவினைக் கலைஞர்களுக்கு கௌரவங்களை வழங்குவது பள்ளத்தாக்கின் மற்ற கைவினை கலைஞர்களின் மன உறுதியை உயர்த்தியுள்ளது.
தங்களை ஊக்குவித்த மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இந்த கைவினை கலைஞர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் தமக்கு மேலும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றும் அவர்கள் கூறினார்கள்.
சில்ப் குரு விருதுக்கு தங்க நாணயமும் 2 இலட்சம் ரூபாவும், தாம்ரபத்ரா சால்வை மற்றும் சான்றிதழும், தேசிய விருதுக்கு ஒரு இலட்சம் ரொக்கம், தாமரபத்ரா சால்வை மற்றும் சான்றிதழ் ஆகியவை கையளிக்கபட்டன.
ஃபாரூக் அஹ்மத் என்ற நம்டே கைவினை கலைஞர், பள்ளத்தாக்கின் கைவினைகலைஞர்களை அங்கீகரிப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், இதன் மூலம் பள்ளத்தாக்கில் அழிந்து வரும் கைவினைப் பொருட்களின் பெருமையை மீட்டெடுக்கவும் உதவும் என்றும் உள்ளூர் ஊடகத்திற்கு கூறினார்.