ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் கருத்தரங்கில் உரையாற்றிய பேச்சாளர்கள் இளைஞர்கள் வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
மதகுருமார்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட உள்ளுர் மக்களின் பங்கேற்பைக் கொண்டதாக ‘ஹக்கீகி இஸ்லாம் மஹ்வார்-இ-இன்சானியத்’ நிகழ்வு ஜம்மு, காஷ்மீரின் மக்கள் நீதி முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, ஜம்மு, காஷ்மீரின் மக்கள் நீதி முன்னணியின் தலைவர் ஆகா சையத் அப்பாஸ் ரிஸ்வி, கருத்தரங்கை ஒரு ‘வரலாற்று தருணம்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் பூஞ்ச் நகரில் ஹக்கீகாதி இஸ்லாம் மஹ்வார்-இ-இன்சானியத்தைப் பிரசாரம் செய்வதில் மதத் தலைவர்களின் பங்கைப் பற்றி விவாதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பாராட்டினார்.
இந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மீது அவர் சாடினார்.
இந்தியாவை குறிவைத்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கூறுகளை ஊக்குவிக்காது. அமைதி, சமத்துவம் மற்றும் நீதி ஆகிய இஸ்லாமிய நெறிமுறைகள் இந்திய நாகரிகத்தின் முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது.
இந்தியா ஒரு இஸ்லாமிய தேசம் அல்ல, ஆனால் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை குறிவைக்கும் மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலல்லாமல், அதன் பின்பற்றுபவர்களுக்கு சம உரிமைகளை வழங்குகிறது.
ஷியா மற்றும் அஹ்மதிகள் இஸ்லாம் அல்லாத சமூகங்கள் என முத்திரை குத்தப்பட்டு அட்டூழியங்களுக்கும் அந்நியப்படுத்தலுக்கும் உள்ளாகிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் எந்த மதத்திற்கோ அல்லது நாகரிகத்திற்கோ எதிரான போராட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அறிவுஜீவிகள், மதத்தலைவர்கள் தீவிரவாதத்தை எதிர்த்து இளைஞர்களிடையே அன்பு, அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் செய்தியைப் பரப்ப வேண்டும்.
தீவிரவாதமோ பயங்கரவாதமோ எந்த மதத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது. வன்முறைக் கருத்தியலுக்கு அடிபணிந்த ஒரு அப்பாவி மனிதனை தீவிரவாதி ஆவதைத் தடுக்கும் கொள்கையையும் செயல்முறையையும் இஸ்லாமிய அறிஞர்கள் வகுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
அதேநேரம், மௌலானா முசாபர் ஹுசைன், ஜம்மு, காஷ்மீரில் மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும்.
எந்தவொரு நாகரீக சமூகத்திலும் அமைதியான சகவாழ்விலும் வன்முறைக்கு இடமில்லை. நிலையான அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் சாத்தியமில்லை.
காஷ்மீரி முஸ்லிம்களும் பண்டித்துக்களும் ஒருவரையொருவர் அணுகுவதற்கான புதிய இயக்கவியலை உருவாக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒரே மண்ணின் மைந்தர்கள், இந்த உண்மைக்கு அரசியல் கதைகள் தேவையில்லை பள்ளத்தாக்கின் தொலைதூரப் பகுதிகளில் இதுபோன்ற கருத்தரங்குகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். இந்த உண்மையான செய்தியை இளைஞர்களிடம் கூட நம்பவைக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ முடிந்தால், நம் நாள் வெற்றி பெறும்
பாராளுமன்றம் மற்றும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் பயங்கரவாதத்தின் கருப்பு முகங்கள், இஸ்லாத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டு வருகின்றன.
ஆனால் இஸ்லாத்திற்கும் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இத்தகைய சூழ்நிலையில், பயங்கரவாதத்தை வரையறுப்பது அனைத்து அறிஞர்கள், அறிவார்ந்த குடிமக்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.
ஜம்மு, காஷ்மீரின் மக்கள் நீதி முன்னணியின் ஆகா சையத் அப்பாஸ் ரிஸ்வி, பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அனைவரையும் வரவேற்றதற்கு நன்றி தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்தரங்குகளை மேலும் நடத்துவோம் என்று உறுதியளித்தார்.