ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் எப்போதும் விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் பள்ளத்தாக்கின் விவசாயிகள் தங்கள் பயிர்களை மேம்படுத்த முடியும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.
இந்த நோக்கத்தின் கீழ், விஞ்ஞானிகள் குங்குமப்பூ பயிரை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கையொன்றை முன்னெடுத்து அதில் வெற்றிகரமாக உற்பத்தியை முன்னெடுத்துள்ளனர்.
காஷ்மீரி குங்குமப்பூ அதன் தூய்மையின் காரணமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது.
இது மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், அதன் நறுமணம் அதை வாங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் உட்பட மக்களை கவர்ந்துள்ளது.
விஞ்ஞானிகளின் புதிய தொழில்நுட்ப புகுத்தலின் ஊடாக அளவு குறைந்த இடத்திலும் குங்குமப்பூவை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
விவசாய நிலம் சுருங்கி வரும் நேரத்தில், குறைந்த இடவசதி உள்ளவர்களுக்கு இந்த உட்புற குங்குமப்பூ வாய்ப்பைக் கொண்டுவருகிறது.
குங்குமப்பூ பயிரை உற்பத்தி செய்ய, விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் குறிப்பிட்ட விதைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அதன்பிறகு, அவர்கள் அனைத்து பொருட்களையும் இருண்ட அறைக்குள் வைத்திருக்கவும், சிறந்த முடிவுகளுக்கு வெப்பநிலையை பராமரிக்கவும் செய்கின்றார்கள்.
முற்போக்கான விவசாயிகள் சிலர் ஏற்கனவே இந்த செயல்முறையை ஆரம்பித்துள்ளதோடு, மேலும் அடுத்த ஆண்டு அரசாங்க ஆதரவுடன் அதிகமான மக்கள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்.