பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.
தலிபான் உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மேலும் மோதல்கள் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தானுடன் சமாதான உடன்படிக்கையை வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதற்காக தலிபானைத் தண்டிக்கும் பாகிஸ்தானின் தந்திரோபாய நகர்வுகள் அதிகரித்துள்ள எல்லை மோதல் சம்பவங்களைக் உக்கிரமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிக முக்கியமாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் உறுதியற்ற தன்மையால் பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தானை ஸ்திரப்படுத்தும் சுமையைத் தவிர்க்க தலிபான் ஆட்சியின் ‘நட்பாளராக’ பார்க்க விரும்பாமல் இருக்கலாம் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் அலுவலகம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை வரவழைத்து, சமன்-ஸ்பின் போல்டாக் பகுதியில் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.
அத்துடன், பொதுமக்களை பாதுகாப்பது இரு தரப்பினரின் பொறுப்பாகும் என்றும், இந்த சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக நிறுவப்பட்ட நிறுவன பொறிமுறைகளைப் பயன்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் வெளியுறவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சமானின் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஆயுத மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலுக்குப் பிறகு அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்ததோடு வழமையான செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
பாகிஸ்தான் இராணுவ ஊடகப்பிரிவு, சமானின் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
இருப்பினும், தலிபான்கள் அதை பாகிஸ்தான் மீது சுமத்தி, அவர்கள் ஆக்கிரமிப்பு என்று குற்றம் சாட்டினர்.