கேரளாவில் வசிக்கும் முகமது அலி ஷிஹாபின் வாழ்க்கைக் கதை சற்றே வித்தியாசமானது. வாழ்க்கையில் சிறிய மற்றும் பெரிய தோல்விகளுக்கு பயப்படுபவர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
முகமது அலி ஷிஹாப் கேரளாவின் மல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள எடவண்ணப்பாரா கிராமத்தில் வசிப்பவர்.
அவர் 15 மார்ச் 1980 அன்று கொரோட் அலி மற்றும் பாத்திமா ஆகியோருக்கு பிறந்தார்.
ஷிஹாபுக்கு ஒரு மூத்த சகோதரர், ஒரு மூத்த சகோதரி மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். ஷிஹாபின் குழந்தைப் பருவம் மிகவும் கடினமான சூழ்நிலையில் கடந்துவிட்டது.
ஷிஹாப் தனது குழந்தைப் பருவத்தில் தனது தந்தை கோரோட் அலியுடன் மூங்கில் கூடைகள் மற்றும் வெற்றிலைகளை விற்றார். ஷிஹாபின் தந்தை மார்ச் 31, 1991 அன்று நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அதன்பிறகு முழு குடும்பத்தின் பொறுப்பும் ஷிஹாபின் தாயாரின் தோள்களில் விழுந்தது. ஷிஹாபின் தாயார் அதிகம் படிக்காததால் தனது ஐந்து குழந்தைகளையும் சரியாக கவனிக்க முடியவில்லை.
கணவர் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாத்திமா 11 வயது ஷிஹாப், 8 வயது மகள் சௌராபி மற்றும் 5 வயது மகள் நசீபா ஆகியோரை கோழிக்கோடு குட்டிகாட்டூர் முஸ்லிம் அநாதை இல்லத்திற்கு அனுப்பினார்.
மூன்று உடன்பிறப்புகளும் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விடவும் ஷிஹாப் அநாதை இல்லத்தில் தங்கி 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
அவர் அநாதை இல்லத்திற்கு மாறியபோது, ஷிஹாபின் வாழ்க்கையில் இல்லாத ஒழுக்கம் கிடைத்தது.
வளங்கள் மற்றும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன, படிப்பில் சீராக முன்னேறி எஸ்.எஸ்.எல்.சியில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். பின்னர் பட்டப்படிப்புக்கு முந்தைய ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.
அவர் வழக்கமான கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர விரும்பி, தனது குடும்பத்துடன் பேசுவதற்காக தனது கிராமத்திற்குத் திரும்பியபோது, பொருளாதாரச்சிக்கல்கள் காரணமாக அவருக்குத் தேவையான ஆதரவைப் கிடைத்திருக்கவில்லை. அதனால், ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
கேரள நீர் ஆணையத்தில் உதவியாளராக பணிபுரிந்தபோது, தொலைதூரக்கல்விக்காக காலிகட் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. வரலாற்றுப்படிப்பிற்கு விண்ணப்பித்தார்.அவர் தனது 27ஆவது வயதில் பட்டம் பெற்றார்.
பத்தாண்டுகள் அநாதை இல்லத்தில் வாழ்ந்துவிட்டு வீடு திரும்பிய ஷிஹாப் தொலைதூர முறையில் படித்தார்.
ஷிஹாப் இதுவரை அரச பணிகளுக்கான 21 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
2004ஆம் ஆண்டு அலுவலக உதவியாராக ரயில்வே டிக்கெட் பரிசோதகராகவும், சிறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.
பின்னர், புதுடில்லியை தளமாகக் கொண்ட ஜகாத் அறக்கட்டளை, கேரளாவில் நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் இலவச பயிற்சி சேவைகளைப் பெறமாணவர்களைத் தேர்வு செய்தது. ஷிஹாப் தேர்வில் தேர்ச்சி பெற்று புடிடெல்லிக்கு சென்றார்.
யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும் போது ஷிஹாப் பல சிரமங்களை எதிர்கொண்டார்.
முதல் 2 முயற்சிகளிலும் தோல்வியடைந்தார். ஆனால் அவர் மனம் தளராமல் 2011ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அகில இந்திய அளவில் 226ஆவது இடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.