புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூட்டணியை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அதற்காக தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ள போதும் நாட்டு மக்களின் உரிமையை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது என எதிர்பார்ப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எந்த பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வை வழங்கவில்லை என்றும் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டினார்.