கொரோனா தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என தமிழக அரசாங்கம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வீரியம் அதிகரித்தால் மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புத்தாண்டு கொண்டாட்டங்களில் எதிர்பாராவிதமாக விபத்துகள் நேரிட்டால் அதனை எதிர்கொள்ள 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.