உக்ரைனின் மன உறுதியை சீர்குலைக்கும் முயற்சியில் ரஷ்யா தொடர்ச்சியான ஆளில்லா விமானத்தாக்குதல்களை திட்டமிடுவதாக உக்ரைன் குற்றச்சாட்டியுள்ளது.
ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா விமானத்தாக்குதல்களைப் பயன்படுத்தி ரஷ்யா, தாக்குதல்களை நடத்தும் என்று உளவுத்துறை அறிக்கைகள் தனக்கு கிடைத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளின் இந்த இலக்கு மற்ற அனைவரையும் போலவே தோல்வியடைவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் இதற்காக தாங்கள் அனைத்தையும் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டின் தொடக்க நாட்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத்தாக்குதல்களை உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏற்கனவே சுட்டு வீழ்த்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.
டான்பாஸ் பகுதியில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஒரு தாக்குதலை நடத்திய பின்னர் இது வந்துள்ளது.
போர்க்களத்தில் ஏற்பட்ட இழப்புகளை மிகவும் அரிதாக ஒப்புக்கொள்ளும் வகையில், இந்த தாக்குதலில் 63 துருப்புக்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறியது.
உக்ரைன் மீதான ஆளில்லா விமானத்தாக்குதல்களை சமீபத்திய நாட்களில் தீவிரப்படுத்தியுள்ள ரஷ்யா, கடந்த மூன்று இரவுகளில் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.