கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதி செய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கையானது நாட்டில் பறவைக் காய்ச்சலை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் அவசியமான ஒன்று என பல பிரதேசங்களில் நுகர்வோர் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.