சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமையவே மின்கட்டணத்தை அதிகரிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதன் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரிகளை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டம் ஏதும் இருந்தால் தெரிந்தவர்கள் அதனை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தை உரிய காலத்தில் செல்லாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது என குற்றம் சாட்டியவர்கள் தற்போது இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் குறிப்பிட்டார்.