ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ வீரர்கள் தடை செய்யப்பட்ட தொலைபேசியை பயன்படுத்தியமையினால் தமது நிலையை அவர்கள் கண்டறிந்துகொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏவுகணைத் தாக்குதலில் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 300 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அவற்றில் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் அவசர பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார் என கிரெம்ளின் அறிவித்துள்ளது.
துருக்கி கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த மத்தியஸ்ம் செய்தமை குறிப்பிடத்தக்கது.