உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.