இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் 3வது போட்டி இன்று ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ளது.
இதில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் போட்டியில் மோதவுள்ளன.
இலங்கை அணிக்கு குசல் மென்டிசும், இங்கிலாந்து அணிக்கு ஹரி ப்ரூக்கும் தலைமைதாங்கவுள்ளனர். இந்த தொடரில் ஏற்கனவே இடம்பெற்ற இரு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதுடன் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளை பாகிஸ்தான் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.

















