குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது.
ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட தடுப்பு அணைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
பிரதமர் மோடியின் தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தடுப்பு அணைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, அறக்கட்டளையின் தலைவர் திலீப் சாகியா தெரிவித்தார்.
இரண்டு வாரங்களில் நிறைவடையவுள்ள இந்த அணையில், சுமார் 2.5 கோடி லிட்டர் நீரை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் ஹிராபென் தனது 99ஆவது வயதில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.