அரசியல் தீர்வு விவகாரத்தில் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமும் முதலில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பொது இணக்க கொள்கையை முன்வைத்தால் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ள தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதற்காக நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பல செயற்பாடுகளை பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் அரசியல் தீர்வு விவகாரம் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுவதால் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் அநுரகுமார தெரிவித்தார்.
ஏனைய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்னர் அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.