கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திட்டிமிட்டிருந்த படி சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்பட்டால் மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 ஆயிரம் டன் எடைகொண்ட கப்பலால் கூட திட்டமிட்ட வழியே வர முடியாது என்ற சூழலில் எவ்வாறு பெரியளவிலான கப்பல்கள் அவ்வழியே வர முடியும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கேள்வியெழுப்பினார் என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தின் மூலம் பயனடையப் போவது டி.ஆர். பாலு மற்றும் கனிமொழியின் நிறுவன கப்பல்கள் மட்டும் என்றும் இதனால் மீனவர்கள் பயன்பெற மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டிற்கு 12% வருமானம் வர வேண்டும், ஆனால், சேதுசமுத்திர திட்டத்தால் அவ்வாறு வருவாய் கிடைக்காது என ஆர்.கே.பச்சோரி குழுவின் அறிக்கையை அண்ணாமலை மேற்கோள்காட்டியுள்ளார்.