தைப்பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்.திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.
அந்த நிலையில் பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரங்கள் இடம்பெறுவதையும் அவதானிக்க முடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.