பிரிவினை வாதிகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சுனில் ரத்னாயக்கவுக்குக் கிடைக்கப்பெற்ற பொதுமன்னிப்பை எதிர்க்கும் கனடா, முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பொதுமன்னிப்பில் விடுவிக்கும்போது மாத்திரம் ஏன் எதிர்ப்பதில்லை என அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும், இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமென கனடா கூற்றை நிராகரித்த அவர், சர்வதேச ரீதியில் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகக் கனடா இருப்பதாக வரலாற்றில் பதியப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.